 *நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...!*  450 நாட்களாக WhatsApp-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் நற்றிணையின் அனைத்துப் பதிவுகளும் தற்போது *இணைய தளத்திலும்* ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன. ஆம்.....! *www.natrinai.org* என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.  பல்சுவைத் தமிழமுதம் பருகிடுங்கள்.  நன்றி   #


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Loading...

Friday, 26 August 2016

என்னால் முடியும்

சுவரில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்குக் குறுக்காகத் தங்கள் கைகளை வைத்து

அவற்றின் வழியை மறிக்கும் குறும்புக்கார சிறுவர்களை நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்.

உடனடியாக அந்த எறும்புகள் வேறொரு வழியைக் கண்டுபிடித்து மீண்டும் நடைபோடும்.

அவன் அந்தப் பாதையைத் தடுத்தாலும், எறும்புகள் வேறொரு பாதையைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்லும்.

குறும்பின் காரணமாக, சுவரிலிருந்து சில எறும்புகளை அச்சிறுவன் விலக்கித் தள்ளுவான்.

அதையும் எதிர்த்துச் சமாளித்து,
அந்த எறும்புகள் மீண்டும் சுவரில் ஏறத் துவங்கும்.

தடைகள் எதுவாக இருந்தாலும் சரி,

முட்டுக்கட்டைகள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும் சரி,

"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையில் அவை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.

இறக்கும்வரை அவை முயற்சி செய்து, போராடி, இன்னும் தீவிரமாக முயன்று,

"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையை, இறக்கும்வரை அவை கொண்டிருக்கும்.

காளை மாடுகள் மேம்பாலங்களில் அளவுக்கதிகமான சுமைகளைச் சுமந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

மிகுந்த போராட்டத்துடன்
அவை ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்கும்.

இறுதியில்
அவை சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும்.

மனிதனின் சுயநலத்திற்கு அவை பலியாகியிருந்தாலும்,

தம் முயற்சியை அவை ஒருபோதும் கைவிடுவதில்லை.

புல், மற்றும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளும்கூட,

"என்னால் முடியும் " என்ற நம்பிக்கையுடன் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி வளர்கின்றன.

சாகும்வரை அவை
தம் சுயநம்பிக்கையை இழப்பதில்லை.

"என்னால் முடியும் "என்பது வாழ்வின் மொழி.

"என்னால் முடியாது " என்பது சாவின் மொழி.

வாழும் நாட்களெல்லாம்
                   வளங்கள் பல பெற்றிடவும்
உள்ளங்கள் ஒன்றாகத் துள்ளி
                   உவகை அடைந்திடவும்...

நல்லதையே பேசுங்கள

*நல்லதையே பேசுங்கள்.*

*விஸ்வாமித்திரரின்* ஆஸ்ரமத்திற்கு *வசிஷ்டர்* வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.
இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார்.

இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது. “நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

*எது உயர்ந்தது* என்பதை நாம் *பிரம்மா*விடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.

அவர்களும் *விஷ்ணு*விடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.

கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். *சிவனும்* உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார்.

விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை *ஆதிசேஷனிடம்* எடுத்துக்கூறினர்.
இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.
வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார் இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.
உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா? *நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது.* என்றார் ஆதிசேஷன்

Sunday, 21 August 2016

NATRINAI

                              நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...!
450 நாட்களாக WhatsApp-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் நற்றிணையின் அனைத்துப் பதிவுகளும் தற்போது  இணைய தளத்திலும் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.
ஆம்.....!
www.natrinai.org என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.
பல்சுவைத் தமிழமுதம் பருகிடுங்கள்.
                                                           நன்றி 

கு(ட்)டி முதலை கதை..

🐊 கு(ட்)டி முதலை கதை..

💪🏼ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள்  அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான காட்டு மிருகத்தைப் பிடித்து வளர்த்து , அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் உயரும் என்று நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது. ஆவலுடன் அதைக் கையில் பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்தான்.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும் , நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள் . அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள் . அவனோ  அதை அலட்சியப்படுத்திவிட்டு முதலையை செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
     
எங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடுதான் சென்று வந்தான். போகும் இடமெல்லாம் மக்கள் மிரண்டு போய்ப் பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை.
         
முதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது. எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது. ஆனால் முதலையின் காரணமாக அவனது மனைவி , பிள்ளைகள் அவனை விட்டு விலகிப் போனார்கள். நண்பர்களும் வருவதில்லை. இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் பயம் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை . இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது . நன்கு வளர்ந்துவிட்ட முதலையின்  வலிமையோடு அவனால் போராட முடியவில்லை . இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது..

🍻குடிப் பழக்கமும் இந்தக் குட்டி முதலை போலத்தான் ஆபத்தில்லாத ஒன்று போல வாழ்வில் நுழைந்து ஒரு நாள்  நம்மையே விழுங்கி விடும் .
அதில் கிடைக்கும் பெருமையும் , மகிழ்ச்சியும் சில நாள் தான். சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும். குடித்து அழிந்தவர்களும், குடியினால் பிச்சைக்காரர்களானவர்களும் விளையாட்டாய் குட்டி முதலையை வீட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான்.
என்றைக்கானாலும் அதற்கு அவர்கள் இரையாகப் போவது நிச்சயம் . எனவே, *குடி எனும் முதலையை இப்போதே கொன்று விடுவது நல்லது.*

🌷 இந்த நாள் இனிய நாளாகட்டும்..💐
படித்து வலித்தது அதனால் பகிர்ந்தேன்...🙏

NATRINAI www.natrinai.org

 450 நாட்களைத் தாண்டி WhatsApp-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் நற்றிணையின் அனைத்துப் பதிவுகளும் தற்போது இணைய தளத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
 ஆம்.....!
  www.natrinai.org
-என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.
 ஈடு இணையில்லா தமிழமுதம் பருகிடுங்கள்.

Saturday, 20 August 2016

மழை

மழைத்துளியோடு தான் என் தேடல்
மடி மீது கவனம் செல்லவில்லை...!

Thursday, 18 August 2016

தமிழ்

🙏((((((((((தமிழ்))))))))))🙏

🌷   யாரும் அணியாத வளையல் -வளையாபதி
🌷   யாரும்   போடாத   தோடு -குண்டலகேசி
🌷   யாரும்    அடிக்காத     
மணி -சீவகசிந்தாமணி
🌷   யாரும்  குடிக்காத     பால் -முப்பால்
🌷    யாரும்  சாப்பிடாத காரம் -சிலப்பதிகாரம்
🌷    யாரும் சமைக்காத வெண்பா -நளவெண்பா
🌷    யாரும்   சேராத      படை -திருமுருகாற்றுப்படை
🌷   யாரும்  கூறாத
நெறி- நன்னெறி
🌷   யாரும்  கற்காத
கலை -மணிமேகலை
🌷   யாரும் சூடாத மலர்
-   ஆத்திச்சூடி
🌷   யாரும் பாடாத புராணம்
-   பெரியபுராணம் 
🌷   யாரும் சாப்பிடாத கலி
-   கலித்தொகை
🌷   யாரும் அருந்தாத காப்பியம் - தொல்காப்பியம்
🌷   யாரும் தொடுக்காத தொகை - நெடுந்தொகை
🌷   யாரும் சூடாத  முல்லை - முல்லைக்கலம்பம்
🌷   யாரும் சாப்பிடாத கோவை -ஆசாரக்கோவை
🌷   யாரும் புனராத நூல் -நன்னூல்
🌷   யாரும் விளையாடாத புராணம்  -திருவிளையாடல் புராணம்