--> ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட் | Whatsapp Useful Messages

ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்

ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்': இதெல்லாம் தெரியுமா?

ஜியோ அறிமுக சலுகையில் வழங்கப்படும் இலவச சேவைகள் நேற்றுடன்  நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என தெரியுமா?

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை இந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தார். அறிமுக சலுகையாக அனைத்து ஜியோ பயனர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், மெசேஜிங், மற்றும் ஜியோ ஆப்ஸ் பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகைகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதாவது டிசம்பர் 31, 2016 சரியாக 11.59.59 வரை மட்டுமே செல்லுபடியானது. இதன் பின் என்ன கவலை மார்ச் 31, 2017 வரை எல்லா ஜியோ சேவைகளும் வழங்கப்படுமே என்கிறீர்களா.? 

இன்று முதல் வழங்கப்பட இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோவில் மாற இருப்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்..

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையை பயன்படுத்துவோர் புததாண்டு சலுகைக்கு மாற்றப்படுவர். இது ஜனவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. அனைத்து ரிலையன்ஸ் ஜியோ பயனர்களும் 4ஜி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை தொடர்ந்து இலவசமாக, மார்ச் 31, 2017 வரை பயன்படுத்த முடியும். 

அறிமுக சலுகையில் தினமும் 4GB அளவு டேட்டா பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு இன்று முதல் 1GB அளவு 4ஜி டேட்டா வழங்கப்படும். இதன் படி ஜியோ வாடிக்கையாளர்கள் தினமும் 1GB அளவு டேட்டாவை முழு  வேகத்திலும் அதன்பிறகு நொடிக்கு 128KB என்ற வேகத்தில் பயன்படுத்தலாம். 

தினசரி அளவு கடந்து கூடுதலாக அதே முழு  வேகத்தில் அதிகப்படியான டேட்டா பயன்படுத்த வாடிக்கைாயளர்கள் பணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான டேட்டாவினை அதிவேகத்தில் பயன்படுத்தலாம். STV54 பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது  1GB 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. STV 301 ரீசார்ஜ் செய்யும் போது 6GB அளவு 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

அனைத்து ஜியோ செயலிகளும் டிசம்பர் 31, 2017 வரை இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஜியோ செயலிகள் மூலம் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு கூடுதல் டேட்டா, புதிய சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ இலவச திட்டங்கள் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக மற்ற நிறுவனங்கள் குற்றச்சாட்டு எழுப்புள்ளன. இருந்தும் ஜியோ சேவைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோவில் இருந்து  வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பியுள்ள உரை செய்தி (ஆங்கிலம்  மற்றும்  தமிழ் )

( Dear Customer,
Your Jio number is being migrated to Jio Happy New Year Offer.
Click www.jio.com/getmyjio and continue to enjoy unlimited free benefits till 31-Mar-17.
In this offer, you will get 1GB High speed data per day, post which speed will be 128kbps.
Team Jio)

( அன்பார்ந்த வாடிக்கையாளரே,
உங்கள் ஜியோ எண், ஜியோ புத்தாண்டு ஆஃபர்-க்கு மாற்றப்பட்டுள்ளது.
நீங்கள் தொடர்ந்து அன்லிமிடெட் பிரீ பெனிபிட்ஸை 31-Mar-17 வரை பெற கிளிக் www.jio.com/getmyjio
இந்த பேக்கில் உங்கள் அதிவேகா டேட்டா சேவை நாள் ஒன்றிற்கு 1 ஜிபி யாக இருக்கும் , அதன் பின்னர் வேகம் 128kbps ஆக மாறும்
ஜியோ டீம்)

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்
ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2017/01/blog-post.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2017/01/blog-post.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content