மொபைல் எண்களை 13 இலக்கமாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத்துறை விளக்கம்
.
வரும் ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அக்டோபர் முதல் ஏற்கெனவே உள்ள 10 இலக்க மொபைல் எண்களும் 13 இலக்க மொபைல் எண்களாக மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
.
இந்நிலையில், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்துறை பயன்பாடுகளுக்கான Smart Metering, Asset Tracking Solutions, Equipment Monitoring Solutions போன்ற சிம் அடிப்படையிலான எம்2எம் சாதனங்களுக்கு மட்டுமே 13 இலக்க எண் வழங்கப்பட உள்ளதாகவும், வழக்கமான மொபைல் பயன்பாடுகளுக்கு 10 இலக்க எண்களே தொடரும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
COMMENTS